சென்னை:
மிழக அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று டிராபிக் ராமசாமி  தொடர்ந்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதுபோன்ற வழக்கு இனிமேல் தொடரக்கூடாது என்று டிராபிக் ராமசாமிக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
traffic
கடந்த செப்டம்பர் மாதம் 22ந்தேதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலமில்லாமல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட  தமிழக முதல்வர் ஜெயலலிதா இரண்டு மாத்திற்கும் மேலாக மருத்துவ மனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த வாரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்ட ஜெயலலிதா தற்போது பிசியோதெரபி சிகிச்சை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியும்,அதிமுக நிர்வாகிகளும்  அவ்வப்போது ஊடகங்களை சந்தித்து ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விளக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்வர் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனு கடந்த  அக்டோபர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவர் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தமிழக ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும்,  முதல்வர் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
chennai-high-court-1
இந்த மனு, ஐகோர்ட்டு  தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய தலைமை நீதிபதி, இதுபோன்ற மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி, புதிய மனுவையும் தள்ளுபடி செய்தார்.
இதுபோன்ற மனுக்களை தொடர்ந்து தாக்கல் செய்த டிராபிக் ராமசாமிக்கு கடும் கண்டனமும் தெரிவித்தார்.
மீண்டும் மீண்டும் இதே போன்ற வழக்குகளை தொடரக்கூடாது என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு ராமசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.