சென்னை: தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் சீரமைக்கப்பட்டுள்ளது. புதிய நல வாரியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் ஒட்டு மொத்த வளர்ச்சி கொண்டு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென தனித்துறை ஒன்றை 1993-ம் வருடம் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஏற்ப்படுத்தப்பட்டு அதன் மூலமாக அரசின் நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடைகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்குள்ள தனிப்பட்ட திறமைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களை உடல் ஊனமுற்றோர், குருடர், செவிடர் என்று அழைப்பதைத் தவிர்த்து அவர்கள் மீது சமுதாயம் கொண்டுள்ள கண்ணோட்டத்தை மாற்றுவதற்கென இனி அவர்களை மாற்றுத் திறனாளிகள் என அழைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசால் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கென சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை என தனியாக ஒரு நிர்வாகத் துறை துவக்கப்பட்டது.

இந்த துறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மறுசீரமைப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டு உள்ளார்.

துணைத்தலைவராக மாற்றுத்திறனாளிகள் துறை செயலரும், உறுப்பினராக, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளரும், உறுப்பினர் செயலாளராக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனரும் நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த துறை சார்ந்த வல்லுநராக, பிரபல மனோத்தத்துவ நிபுணரும், சமூக சேவைகியுமான திருமதி பி.அருணாதேவி நியமிக்கப்பட்டு உள்ளார்.

மேலும் உறுப்பினர்களாக 6 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.