அருண் ஜெட்லிக்கு தமிழக துணை முதல்வர் அஞ்சலி

Must read

டில்லி

றைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளார்.

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர்  அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்குப் பல கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவர் உடலுக்கு, மக்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். அவருக்கு இறுதி மரியாதை செலுத்தத் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை விமானம் மூலம் டில்லிக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

துணை முதல்வர் பன்னீர் செல்வத்துடன் அமைச்சர்கள் ஜெயக்குமார்,  தங்கமணி உள்ளிட்டோர் டில்லி சென்றுள்ளனர். இறுதி அஞ்சலிக்குப் பிறகு பன்னீர் செல்வம்,”அருண் ஜெட்லியின் மறைவு நாட்டுக்குப் பேரிழப்பாகும். அவர் நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த சேவை ஆற்றியவர்” என செய்தியாள்ர்களிட்ம் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article