சென்னை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவையில் 213 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது.
மாவட்டம் தோறும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு உள்ளது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றைய நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,41,488 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் சென்னையில் 603 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 213 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது.
திருவள்ளூர் 137, செங்கல்பட்டு 112 பேர், ஈரோடு 108, சேலம் 106 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்த அளவாக தென்காசியில் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.