சென்னை

மிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 5622 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 6,14,507 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 9,718 பேர் உயிரிழந்து 5,58,534 பேர் குணமடைந்து தற்போது 46,288 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 1364 பேருக்கு கொரோனா உறுதி ஆகி உள்ளது.

சென்னையில் இதுவரை 1,71,415 பேர் பாதிக்கப்பட்டு 3262 பேர் உயிர் இழந்து 1,55,842 பேர் குணம் அடைந்து தற்போது 12,311 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 36,745 பேர் பாதிக்கப்பட்டு 3262 பேர் உயிர் இழந்து 33,683 பேர் குணம் அடைந்து தற்போது 2,498 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 33,104 பேர் பாதிக்கப்பட்டு 557 பேர் உயிர் இழந்து 30,863 பேர் குணம் அடைந்து தற்போது 1,684 பேர் சிகிச்சையில் உள்ளனர்.