சென்னை
தமிழக காங்கிரஸ் கட்சி மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கே ஆதரவு அளிக்கும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையில் காவிரி நீர் தொடர்பான பிரச்சினை வெகுநாட்களாக உள்ளது. தற்போது காவிரி நீர் ஆணையம் அமைக்கப்பட்டதால் பிரச்சினை தீரும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கர்நாடக அரசு தமிழகத்துக்குத் தரவேண்டிய காவிரி நீரைத் தராமல் இழுக்கடித்து வருகிறது.
இந்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் தடுப்பணை கட்ட கர்நாடக அரசு முடிவு எடுத்தது. அதற்குத் தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நை கட்ட தமிழக அரசு உதவ வேண்டும் எனக் கர்நாடக அரசு கடுதம் எழுதியது. தமிழகத்துக்கு வரும் தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டு விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும் என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த அணை கட்டுவதால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் நேரில் விளக்கம் அளித்தார். ஆயினும் கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “மேகதாது அணை விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் தனது முழு ஆதரவையும் மு க ஸ்டாலின் தலைமையில் இயங்கும் தமிழக அரசுக்கே அளிக்கும்” எனக் கூறி உள்ளார்.