சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார்.
இன்று சட்டசபை கூட்டத்தொடரில் தொழில்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு தமிழக் அமைச்சர் டி ஆர் பி ராஜா பதில் அளித்தார்
அப்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,
”தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆண்டுக்கு 10 லட்சம் என்ற அடிப்படையில், 31 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளார். அந்த வரிடையில் விரைவில் 50வது சிப்காட் பூங்காவை முதல்வர் தொடங்கி வைப்பார்.
தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழக தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்தாண்டு ரூ.2100 கோடி கடன் வழங்கப்படும்
.உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் 60% உறுதி செய்யப்பட்டுள்ளன. விரைவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளார்.”
எனத் தெரிவித்தார.