டெல்லி: பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்படுள்ளதை கண்டித்து, ஜூலை 27ஆம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு புறக்கணிக்கும் ‘என முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில், மாநிலங்களும் காங்கிரஸ் முதல்வர்களும் புறக்கணிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூலை 27 அன்று நடைபெற உள்ள நிதி ஆயோக் (NITI ) கூட்டத்தைத் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று முதல்வர்கள் – ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), சித்தராமையா (கர்நாடகா), சுக்விந்தர் சிங் சுகு (இமாச்சலப் பிரதேசம்) மற்றும் திமுகவைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின் (தமிழ்நாடு) தவிர்ப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட்டில் சில மாநிலங்களுக்கு மட்டும் அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. தங்கள் எதிர்ப்பின் ஒரு பகுதியாக, காங்கிரஸ் முதல்வர்கள் ஜூலை 27ஆம் தேதி நடைபெறவுள்ள NITI ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் குற்றம் சாட்டினார்.
“இந்த அரசாங்கத்தின் அணுகுமுறை அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானது. உண்மையான, பாரபட்சமான நிறங்களை மறைக்க வடிவமைக்கப்பட்ட நிகழ்வில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக முதல்வர் ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது காங்கிரஸ் முதல்வர்களும் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.