செங்கல்பட்டு
செங்கல்பட்டில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தடுப்பூசி உற்பத்தி மையத்தை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக ஆங்காங்கே பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
எனவே மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்ய மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதையொட்டி பல மாநில அரசுகள் சர்வதேச அளவிலான ஒப்பந்த புள்ளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் உள்நாட்டில் மேலும் உற்பத்தி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது.
அவ்வகையில் செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இங்கு தடுப்பூசி தயாரிப்பதற்கான சாத்தியக் கூறுகள், அதற்கு தேவைப்படும் நிதி மற்றும் தடுப்பூஇச் தயாரிக்கும் பணியை தொடங்க தேவையான நாட்கள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்துள்ளார்.