சென்னை

மிக்ரான் பரவலைத் தடுக்க பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்குமாறு முதல்வர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாறிய திரிபான ஒமிக்ரான் பரவல் உலக மக்களைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது,.  இந்த பாதிப்பு தமிழகத்திலும் பரவ தொடங்கி உள்ளது.  இதுவரை ஒமிக்ரான் தொற்றுக்கு 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  விரைவில்  இது மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுவதால் மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.

இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஒமிக்ரான் பரவலை தடுக்க ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில், “மக்கள் பண்டிகை காலங்களில் கூட்டமாகக் கூடுவதால் கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தவிர கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அரசு மக்கள் நலன் கருதி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அனைத்து பொதுமக்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.  தவறாமல் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.