சென்னை

மிழக முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இல்ல திருமண விழா புதுக்கோட்டையில் நடைபெற று வருகிறது. காலை திருமண நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், மாலை வரவேற்பு நடைபெறு உள்ளது. இந்த  திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி மாலை 5 மணியளவில் முதல்வ்ர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து திருச்சிக்கு செல்வார் என்றும், இரவு 9 மணியளவில் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது திடீரென முதல்வரின் புதுக்கோட்டை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  முதல்வரின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதர்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.