சென்னை: உக்ரைனில் இருந்து தமிழ்நாடு  திரும்பிய மாணவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.  கடைசியா உக்ரைனின் சுமி நகரில் சிக்கியவர்கள் நேற்று டெல்லி வந்தடைநனர். இவர்களில் 53 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள். இவர்கள்  இன்று காலை  டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.

இந்த மாணவர்களின் கடைசி குழுவை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை விமான நிலையம் சென்று வரவேற்றார். உக்ரைனில் இருந்து வெளியேற்றும் முயற்சிகளை ஒருங்கிணைக்க உதவிய திமுக எம்பிக்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய அரசுக் குழுவையும் முதல்வர் பாராட்டினார்.

உக்ரைனில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 1,860 மாணவ மாணவிகள் மீட்கப்பட்டதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் கடைசிகட்ட மாணவர்களை விமான நிலையத்தில் வரவேற்கிறார் முதல்வர் ஸ்டாலின்…