சென்னை

மிழக முதல்வ்ர் மு க ஸ்டாலின் செஸ் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீர்ர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கி உள்ளர்.

நேற்று தமிழக அரசு வெளியிடுள்ள அறிக்கையில்.

“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 24.09.2024 அன்று முகாம் அலுவலகத்தில், ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்த்தில் இம்மாதம் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற இரண்டு பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி மற்றும் அணியின் தலைவரான ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.90 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கி. வாழ்த்தினார்.

புடாபெஸ்த்தில் செப்டம்பர் 10 முதல் 23 வரை நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்க மற்றும் பெண்கள் என்ற இரண்டு பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் குகேஷ், பிரக்குானந்தா மற்றும் வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சம் உயரிய ஊக்கத்தொகையாகவும், அணியின் தலைவரான ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூ.15 லட்சத்திற்கான காசோலையும், என மொத்தம் ரூ.90 லட்சத்திற்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தி அடுத்து வரும் குளோபல் செஸ் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலளார் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, செஸ் விளையாட்டு வீரர், விராங்கனைகளின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.