மதுரை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலையிலேய தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள நிலையில், அதிமுக தரப்பபிலும் தேர்தல் பிரசாரத்தை முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொடங்கி உள்ளனர்.

சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியும், மதுரையில் ஓபிஎஸ்சும் பிரசாரங்களை தொடங்கி உள்ள னர். தென் மாவட்ட மக்களை கவரும் வகையில் அவரது பிரசார பயணங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதி.மு.க. கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனை முதலமைச்சர் எடப்பாடி அறிமுகம் செய்து வைத்தார்.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றுள்ள இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், பிரச்சார வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி  இன்று மதுரை அருகே உள்ள அலங்காநல்லூரில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.   தேனி வேட்பாளரான தனது மகன் ரவீந்திரநாத் துக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். அலங்காநல்லூரில் வீடு வீடாக சென்ற பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தின்போது, ரவீந்திரநாத்தும் உடன் இருந்தார்.

மக்களிடம் பேசிய ஓபிஎஸ், எனக்கே வாக்களிப்பதாக நினைத்து என் மகனுக்கு வாக்களிக்க வேண்டும், உங்களிடம் இவரை ஒப்படைக்கிறேன் நீங்கள்தான் இவரை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று மதுரை மக்களிடம் கூறி ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.