மயிலாடுதுறை,

மிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில், மயிலாடுதுறை புஷ்கரத்தில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அவருடன் மேலும் சில அமைச்சர்களும் புனித நீராடினர்.

நாகப்பட்டினத்தில் இன்று மாலை நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வந்துள்ளனர். வரும் வழியில், மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மஹா புஷ்கரத் திருவிழாவி ல் கலந்துகொண்டு காவிரியில் புனி தநீராடினார். முதல்வருடன் அமைச்சர்களும் புனித நீராடினார்கள்.

இன்று காலை சுமார 9.30 மணி அளவில்,  மயிலாடுதுறை காவிரியின் வடக்குகரைக்கு வந்த முதல்வருக்கு பூர்ண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு, புஷ்கரத்தில் புனித நீராடினார். அவருடன் அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் நீராடினார்.

அதைத்தொடர்ந்து புஷ்கரத்தில் தங்கியிருக்கும், காஞ்சி சங்காராச்சாரியார்கள் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரிடம் ஆசி பெற்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாகை சென்றார்.

முன்னதாக, இன்று அதிகாலையில் சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, வீரமணி, காமராஜ் ஆகியோர் புனித நீராடியது குறிப்பிடத்தக்கது.