சென்னை,
மத்திய அமைச்சரவையின் முடிவு எதிரொலியாக நாடு முழுவதும் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் தங்கள் கார்களில் பொருத்திய இருந்து சைரன் விளக்குகளை அகற்றி வருகின்றனர்.
இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தனது காரில் இருந்த சிவப்பு விளக்கை அகற்றினார்.
ஆபத்து காலத்தில் அவசர சேவைக்காக செல்லும் வாகனங்களை தவிர ஜனாதிபதி, பிரதமர், மந்திரிகள் மற்றும் வி.ஐ.பி.களின் வாகனங்களில் இருந்து சுழலும் சிவப்பு விளக்குகள் அகற்றப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி, மத்தியில் நடைபெறும் ஆட்சி சாமான்ய மக்களுக்கான அரசு என்பதை உணர்த்தும் வகையில் வரும் மே மாதம் முதல் தேதியில் இருந்து பிரதமர், மத்திய மந்திரிகள் உள்ளிட்டோரின் கார்களில் இருந்து சுழலும் சிவப்பு விளக்குகள் அகற்றப்படும் என அறிவித்தார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
அரசின் இந்த முடிவையடுத்து, மத்திய மந்திரிகள், மாநில முதல்வர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகள் மற்றும் வி.ஐ.பி.க்கள் தங்கள் வாகனங்களில் பொருத்தப்பட்ட சிவப்பு சுழலும் விளக்குகளை அகற்றி வருகின்றனர்.
அவ்வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது காரில் பொருத்தப்பட்ட சிவப்பு சுழல் விளக்கை அகற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சரவை முடிவையடுத்து தனது வாகனத்தில் உள்ள சிவப்பு சுழல் விளக்கை அகற்றியதாக தெரிவித்தார். விரைவில் அமைச்சர்களும் தங்கள் கார்களில் உள்ள சிவப்பு சுழல் விளக்குகளை அகற்றுவார்கள் என்று கூறினார்.
மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று சிவப்பு விளக்கை அகற்றிய முதல்வர், விஐபிக்க்கள் செல்லலும்போதும், முதல்வர் செல்லும்போதும் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி டிராபிக் ஜாமை ஏற்படுத்தி வருகின்றனர் காவலர்கள்.
சுழல் விளக்கும் விசயம்போல இந்த விஷயத்தையும் கவனத்தில் கொண்டு, டிராபிக்கை நிறுத்தாமல், மக்ககளோடு மக்களாக பயணிக்கலாமே என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.