சென்னை: மருத்துவ குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 8ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 30ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஏராளமான தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. பேருந்து, ரயில் சேவைகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில், வரும்8 ம் தேதி காலை 10 மணிக்கு மருத்துவ குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் முறையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதற்கேற்ப மருத்துவ வசதிகள், சோதனைகள் அதிகரிப்பது, தளர்வுகள் எதிரொலியாக கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.