சென்னை

ன்று கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 6 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலர் ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  தற்போதைய இரண்டாம் அலை பரவல் முந்தைய நிலையை விட மோசமாக உள்ளது.   இதையொட்டி தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு விதிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.   கொரோனா கட்டுப்பாட்டு விதிகளையும் மீறி இந்த மாவட்டங்களில் தினசரி பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட ஆறு மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை க் கூட்டம் நடத்த உள்ளார்.  காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கல் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்ப்பு உள்ளது.