சென்னை
தமிழகத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்குவது குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குடிநீர் பயன்பாடு அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் வீடுகளுக்கு பொதுவாக குழாய் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
இவ்வாறு குழாய் மூலம் தண்ணீர் கொடுக்க முடியாத பகுதிகளில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் லாரிகள் மூலம் கொண்டு சென்று நிரப்பப்பட்டு வருகிறது
கோடைக் காலக் குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிப்பது தொடர்பாகத் தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் தலைமைச்செயலகத்தில் தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனையில் 12 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றுள்ளனர் கூட்டத்தில்.கோடைக் காலத்தில் ஏற்படும் குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளித்து தடையின்றிக் குடிநீர் விநியோகிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது.