சென்னை:
தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக 14 இடங்களிலும் அதிமுக 8 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது.
தமிழகத்தில் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் என 5 கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. இதன் காரணமாக 5 முனை போட்டி நிலவியது. அனைத்து கட்சி தலைவர்களும் கடுமையான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அதிமுக அரசுக்கு இது வாழ்வா சாவா பிரச்சினையாக கருதப்பட்டது. இந்தி நிலையில் 8 தொகுதிகள் வெற்றிபெற்றதால் அதிமுக தனது ஆயுட்காலத்தை தொடர்வதில் சிக்கல் ஏற்படாத நிலை உருவாகி உள்ளது.
அதேவேளையில் மத்திய மாநில அரசுகளுக்கு சவால்விட்டு அதிரடி அரசியல் களங்களை உருவாக்கி வந்த டிடிவி தினகரன், சீமான், கமல்ஹாசன் போன்றோர் 3வது, 4வது, 5 வது இடத்துக்கு தள்ளப்பட்டு அரசியல் அனாதைகளாகி உள்ளனர்.
திமுக, அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் விவரம், அவர் பெற்ற வாக்குகள் கிழே தரப்பட்டுள்ளன.
5 – பூந்தமல்லி – திமுக வெற்றி
கிருஷ்ணசாமி ( DMK) 1,36,905 – வெற்றி
ஜி வைத்தியநாதன் ( AIADMK) 76,809
12 – பெரம்பூர் – திமுக வெற்றி
ஆர்.டி.சேகர் ( DMK) 1,06,394
ஆர்.எஸ்.ராஜேஷ் ( AIADMK) 38,371
33 – திருப்போரூர் – திமுக வெற்றி
செந்தில் ( DMK) 1,03,248
எஸ் ஆறுமுகம் ( AIADMK) 82,235
39 – சோளிங்கர் அதிமுக வெற்றி
ஜி சம்பத் ( AIADMK) 1,03,545
அசோகன் ( DMK) 87,489
46 – குடியாத்தம் – திமுக வெற்றி
காத்தவராயன் ( DMK) 1,06,137
கஸ்பா ஆர் மூர்த்தி ( AIADMK) 78,296
48 – ஆம்பூர் – திமுக வெற்றி
வில்வநாதன் ( DMK) 96,455
ஜே ஜோதிராமலிங்கராஜா ( AIADMK) 58,688
55 – ஒசூர் – திமுக வெற்றி
எஸ் ஏ சத்யா ( DMK) 1,15,027
எஸ் ஜோதி ( AIADMK) 91,814
60 – பாப்பிரெட்டிபட்டி – அதிமுக வெற்றி
ஏ கோவிந்தசாமி ( AIADMK) 1,03,981
மணி ( DMK) 85,488
61 – அரூர் – அதிமுக வெற்றி
வி சம்பத்குமார் ( AIADMK) 88,632
கிருஷ்ணகுமார் ( DMK) 79,238
116 – சூலூர் – அதிமுக வெற்றி
வி.பி.கந்தசாமி ( AIADMK) 1,00,782
பொங்கலூர் நா.பழனிச்சாமி ( DMK) 90,669
130 – நிலக்கோட்டை – அதிமுக வெற்றி
எஸ் தேன்மொழி ( AIADMK) 90,982
சவுந்திரபாண்டியன் ( DMK) 70,307
134 – அரவக்குறிச்சி – திமு க வெற்றி
செந்தில் பாலாஜி ( DMK) 97,800
செந்தில்நாதன் ( AIADMK) 59,843
168 – திருவாரூர் திமுக வெற்றி
பூண்டி கலைவாணன் ( DMK) 1,17,616
ஆர் ஜீவானந்தம் ( AIADMK) 53,045
பூண்டி கலைவாணன் ( DMK) 1,17,616
174 – தஞ்சாவூர் – திமுக வெற்றி
நீலமேகம் ( DMK) 88,972
ஆர் காந்தி ( AIADMK) 54,992
187 – மானாமதுரை – அதிமுக வெற்றி
எஸ் நாகராஜன் ( AIADMK) 85,228
இலக்கியதாசன் ( DMK) 77,034
எஸ் நாகராஜன் ( AIADMK)
195 – திருப்பரங்குன்றம் – திமுக வெற்றி
சரவணன் ( DMK) 85,434
எஸ்.முனியாண்டி ( AIADMK) 83,038
198 – ஆண்டிபட்டி – திமுக வெற்றி
ஏ.மகாராஜன் ( DMK) 87,079
ஏ லோகிராஜன் ( AIADMK) 74,756
199 – பெரியகுளம் – திமுக வெற்றி
சரவணக்குமார் ( DMK) 88,393
மயில்வேல் ( AIADMK) 68,073
204 – சாத்தூர் – அதிமுக வெற்றி
எம்எஸ்ஆர் ராஜவர்மன் ( AIADMK) 76,820
சீனிவாசன் ( DMK) 75,719
209 – பரமக்குடி – அதிமுக வெற்றி
என் சதன்பிரபாகர் ( AIADMK) 82,438
சம்பத்குமார் ( DMK) 68,406
213 – விளாத்திக்குளம் – அதிமுக வெற்றி
பி சின்னப்பன் ( AIADMK) 70,139
ஜெயக்குமார் ( DMK) 41,585
217 – ஒட்டப்பிடாரம் – திமுக வெற்றி
சண்முகைய்யா ( DMK) 73,241
பெ.மோகன் ( AIADMK) 53,584
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. த ற்போதைய நிலையில், எடப்பாடி அரசுக்கு 113 உறுப்பினர் கள் ஆதரவு மட்டுமே உள்ளது. இதன் காரணமாக அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழலே நிலவுகிறது. 5 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தாலே ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும். ஆனால், தற்போது 8 தொகுதிகளை அதிமுக பெற்றிருப்பதால், எடப்பாடி அரசு மீதமுள்ள நாட்களையும் மோடி துணையுடன் கடந்துவிடும் என நம்பலாம்…