சென்னை:

மிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் அறிவித்து உள்ளது.

தமிழக அரசின் ஆயுட்காலத்தை முடிவு செய்யும் வகையில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதன் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.  இந்த சட்ட மன்ற இடைத்தேர்தலில்   திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் என 5 கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. இதன் காரணமாக 5 முனை போட்டி நிலவியது.

இந்த 22 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளை கைப்பற்றினால், ஆட்சியை கைப்பற்றி விடலாம் என எதிர்பார்த்தது. ஆனால், திமுகவுக்கு 13 தொகுதிகளே கிடைத்துள்ளது. அதுபோல குறைந்த பட்சம் 8 தொகுதிகள் வெற்றிபெற்றேயாக வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கிய அதிமுகவுக்கு 9 தொகுதிகள் கிடைத்துள்ளன.

இதன் காரணமாக தற்காலிகமாக எடப்பாடி ஆட்சியின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  டிடிவி தினகரனின் அமமுக, நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் கட்சிகள் காணாமல் போயுள்ளன.

இந்த இடைத்தேர்தலில் திமுக 45.07 சதவிகிதம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளன. அதையடுத்து அதிமுக 38.18 சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ளன. அதுபோல நோட்டா 1.08 சதவிகித வாக்குகளும் மற்றவர்கள் 15.66 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளன.

5 – பூந்தமல்லி – திமுக வெற்றி

கிருஷ்ணசாமி ( DMK) 1,36,905 – வெற்றி
ஜி வைத்தியநாதன் ( AIADMK) 76,809

12 – பெரம்பூர் – திமுக வெற்றி 
ஆர்.டி.சேகர் ( DMK) 1,06,394
ஆர்.எஸ்.ராஜேஷ் ( AIADMK) 38,371

 33 – திருப்போரூர் – திமுக வெற்றி
செந்தில் ( DMK) 1,03,248
எஸ் ஆறுமுகம் ( AIADMK) 82,235

39 – சோளிங்கர் அதிமுக வெற்றி
ஜி சம்பத் ( AIADMK) 1,03,545
அசோகன் ( DMK) 87,489

46 – குடியாத்தம் – திமுக வெற்றி

காத்தவராயன் ( DMK) 1,06,137
கஸ்பா ஆர் மூர்த்தி ( AIADMK) 78,296

48 – ஆம்பூர் – திமுக வெற்றி
வில்வநாதன் ( DMK) 96,455
ஜே ஜோதிராமலிங்கராஜா ( AIADMK) 58,688

55 – ஒசூர் – திமுக வெற்றி
எஸ் ஏ சத்யா ( DMK) 1,15,027
எஸ் ஜோதி ( AIADMK) 91,814

60 – பாப்பிரெட்டிபட்டி – அதிமுக வெற்றி
ஏ கோவிந்தசாமி ( AIADMK) 1,03,981
மணி ( DMK) 85,488

61 – அரூர் – அதிமுக வெற்றி
வி சம்பத்குமார் ( AIADMK) 88,632
கிருஷ்ணகுமார் ( DMK) 79,238

116 – சூலூர் – அதிமுக வெற்றி
வி.பி.கந்தசாமி ( AIADMK) 1,00,782
பொங்கலூர் நா.பழனிச்சாமி ( DMK) 90,669

130 – நிலக்கோட்டை – அதிமுக வெற்றி
எஸ் தேன்மொழி ( AIADMK) 90,982
சவுந்திரபாண்டியன் ( DMK) 70,307

134 – அரவக்குறிச்சி – திமு க வெற்றி 
செந்தில் பாலாஜி ( DMK) 97,800
செந்தில்நாதன் ( AIADMK) 59,843

168 – திருவாரூர் திமுக வெற்றி
பூண்டி கலைவாணன் ( DMK) 1,17,616
ஆர் ஜீவானந்தம் ( AIADMK) 53,045
பூண்டி கலைவாணன் ( DMK) 1,17,616

174 – தஞ்சாவூர் – திமுக வெற்றி
நீலமேகம் ( DMK) 88,972
ஆர் காந்தி ( AIADMK) 54,992

187 – மானாமதுரை – அதிமுக வெற்றி
எஸ் நாகராஜன் ( AIADMK) 85,228
இலக்கியதாசன் ( DMK) 77,034

195 – திருப்பரங்குன்றம் – திமுக வெற்றி
சரவணன் ( DMK) 85,434
எஸ்.முனியாண்டி ( AIADMK) 83,038

198 – ஆண்டிபட்டி – திமுக வெற்றி
ஏ.மகாராஜன் ( DMK) 87,079
ஏ லோகிராஜன் ( AIADMK) 74,756

199 – பெரியகுளம் – திமுக வெற்றி
சரவணக்குமார் ( DMK) 88,393
மயில்வேல் ( AIADMK) 68,073

204 – சாத்தூர் – அதிமுக வெற்றி
எம்எஸ்ஆர் ராஜவர்மன் ( AIADMK) 76,820
சீனிவாசன் ( DMK) 75,719

209 – பரமக்குடி – அதிமுக வெற்றி
என் சதன்பிரபாகர் ( AIADMK) 82,438
சம்பத்குமார் ( DMK) 68,406

213 – விளாத்திக்குளம் – அதிமுக வெற்றி
பி சின்னப்பன் ( AIADMK) 70,139
ஜெயக்குமார் ( DMK) 41,585

217 – ஒட்டப்பிடாரம் – திமுக வெற்றி
சண்முகைய்யா ( DMK) 73,241
பெ.மோகன் ( AIADMK) 53,584