சென்னை

ந்தி மொழி திணிக்கப்பட்டால் அதை பாஜக எதிர்க்கும் என தமிழக பாதக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து இந்தி மொழிக்கு ஊக்க்கம் அளித்து வருகிறது.  ஆங்கிலத்தில் எழுத்தப்படும் கடிதங்களுக்கு இந்தியில் பதில் அளிக்கப்படுகிறது.  மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் இந்தியில் பெயர்கள் வைக்கப்படுகின்றன.  இத்னால் பாஜக இந்தி மொழியை திணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை அடையாறு காந்தி நக்ரில் கராத்தே தியாகராஜன் தலைமையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.  இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, துணைத்தலைவர் துரைசாமி, பொதுச் செயல்ர் கரு நாகராஜன் உள்ளிட்ட  நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.  நிகழ்வில் அண்ணாமலை செய்தியாளரக்ளை சந்தித்தார்.

அப்போது அண்ணாமலை,

“எந்த மொழியை திணிப்பதிலும் பாஜகவுக்கு உடன்பாடு கிடையாது. எனவே இந்தி மொழியைத் திணித்தாலும் அதனை எதிர்ப்போம்.  காங்கிரஸ் தான் இந்தி மொழி திணிப்பையே கொண்டுவந்தது. இந்த கட்சியில் மாநிலத்தில் ஒரு பேச்சும், டெல்லியில் ஒரு பேச்சுமாக இருக்கிறது.அனைத்து ஏழைகளும்  நீட் தேர்வு மூலம் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர்

எனத் தெரிவித்துள்ளார்.