சென்னை:

தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில், பாஜக சார்பில் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொலைக் காட்சி அரசியல் விவாதங்கள் கட்சியின் நிலைபாட்டையும், கருத்துகளையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு பயனளிப்பதாக உள்ளது.

ஆனால், சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையும், சம வாய்ப்பும் இல்லை.

எனவே, பாரதிய ஜனதா கட்சி சார்பில் யாரும் விவாதங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.