திருவனந்தபுரம்:
காவிரி பிரச்சினை காரணமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தால் கேரள பஸ்கள் அனைத்தும் தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகாவை கண்டித்து தமிழகம், புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன்று பந்ந் நடந்து வரும் நிலையில், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் கேரளா அரசு பஸ்கள் அனைத்து எல்லையில் நிறுத்தப்பட்டது.
செங்கோட்டையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள், நாகர்கோவிலில் இருந்து கேரளா பகுதி செல்லும் பஸ்கள், தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் பஸ்களும் நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக கேரளா செல்லும் பயணிகள் ரயில் மூலம் பயணித்து வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel