சென்னை: யுஜிசி-க்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனி தீர்மானத்துக்கு அ.தி.மு.க உள்பட பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். பா.ஜ.க மட்டும் வெளிநடப்பு செய்துள்ளது. இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நான்காம் நாள் கூட்டம் தொடங்கியது வினாக்கள்- விடைகள் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். அதைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின், பல்கலைக்கழக வேந்தர் நியமனம் விவகாரம் குறித்து யுஜிசி வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களுக்கு எதிரான தனி நபர் தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
முன்னதாக யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பை தொடர்ந்து, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி விதிகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்பது மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் விதிகளை மாற்றியுள்ள யுஜிசி-க்கு எதிராக இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு புரட்சி பாரதம், த.வா.க., கொ.ம.தே.க, காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், முதலமைச்சர் கொண்டுவந்த தனித் தீர்மானத்தை ஏற்க மறுப்பு தெரிவித்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சட்டசபையில் யு.ஜி.சி., வரைவு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திரன்; இது வரைவு அறிக்கை; இறுதியானது அல்ல. வெளிநாட்டு மாணவர்களுடன் நம் மாணவர்கள் போட்டி போடும் வகையில், கல்வி தொடர்பாக திருத்தங்கள் வேண்டும் என்று கூறினார்.