சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற்று முடிந்த தமிழக தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.
இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய ஜூன் 30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு மாதத்திற்குள் அதாவது ஜூன் 2ம் தேதிக்குள் வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.