டெல்லி:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இன்றுமுதல் மார்ச் 31ந்தேதி வரை ஊடக சந்திப்புகள் கிடையாது என்று திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்து உள்ளது.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று வரும் நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியினர் ஊடகத்தினரை சந்தித்து பேசுவது வாடிக்கையாக நடைபெறும் நடவடிக்கையாகும்.
தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாராளுமன்றத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் திரிணலமுல் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தினசரி ஊடக சந்திப்புகள் இன்று முதல் மார்ச் 31 வரை இடைநிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவித்து உள்ளது.