டெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து அறிக்கை வாசித்துக்கொண்டிருந்த மத்திய அமைச்சரின் கையில் இருந்த அறிக்கையை பறித்து கிழித்து எறிந்து அநாநகரிக செயலில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சாந்தனு சென் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்து ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இஸ்ரேலின் பெகாசாஸ் நிறுவனத்தின் உளவு மென்பொருள் மூலம் இந்திய தலைவர்கள் உள்பட உலக நாடுகளின் தலைவர்களின் டெலிபோன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தொடர்ந்து, நாடாளுமன்ற அவைகளையும் முடக்கி வருகின்றன.

இந்த நிலையில், நேற்று மாலை ராஜ்யசபாவில், பெகாசஸ் விவகாரம் குறித்து, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிக்கை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரத கையில் இருந்த தாளை திரிணாமுல் எம்.பி. சாந்தனு சென் பறித்து  கிழித்தெறிந்தார். இது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சபை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று சபை கூடியதும், சாந்தனு சென் இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, மழைக்கால அமர்வு முடியும் வரை உங்களை நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை நீங்கள் (டி.எம்.சி எம்.பி. சந்தானு சென்) அறிந்திருப்பதால், நாங்கள் சபையை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார்.

திரிணாமுல் எம்.பி. சாந்தனு சென்னின் அநாகரிக நடவடிக்டிக  குறித்து கடுமையாக விமர்சித்த அவையின் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் , அவரை இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கையில் பங்கேற்க தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.