குஜராத் பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் 11 பேர் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2002 குஜராத் வன்முறைகளின் போது பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 11 பேர் கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டனர்.
கோத்ரா கலவரத்தின் போது பில்கிஸ் பானுவை கூட்டு பலாத்காரம் செய்ததுடன் அவரது மகள் உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொடூரமாக படுகொலை செய்தனர்.
இந்த நிலையில், அவர்களின் தண்டனை காலம் முடிவடைவதற்கு முன்பே அவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
11 பேரும் சிபிஐ விசாரணையின் தண்டனை பெற்றவர்கள் என்பதால் அவர்களை மாநில அரசு விடுதலை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.