ண்டிகர்

டெல்லி நோக்கி பேரணியாக செல்லும் விவசாயிகளை திருணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் சதித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி.) வழங்குவதாக உத்தரவாதம் அளித்து சட்டம் இயற்றவேண்டும், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக செல்லும் போராட்டத்தை தொடங்கினர்.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் அரியானா எல்லைப் பகுதியான ஷம்பு மற்றும் கன்னவுரி பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விவசாயிகள் எல்லையை தாண்டி செல்லாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டதால், விவசாயிகள் எல்லைப் பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர்.

இன்று கன்னவுரி எல்லையில் போராடும் விவசாயிகளை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குழுவினர் சந்தித்து ஆதரவு அளித்தனர். அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, தொலைபேசியில் விவசாயிகளுடன் பேசியபோது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு நீதி கிடைக்க எப்போதும் துணைநிற்கும் என்று உறுதியளித்தார்.

அந்தக் குழுவில் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன், முகமது நதிமுல் ஹக், டோலா சென், சாகரிகா கோஸ் மற்றும் சாகத் கோகலே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். விவசாயிகளுடன் அவர்கள் சுமார் ஒரு மணி இருந்தனர். அப்போது வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்குவது குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிரச்சினை எழுப்ப உள்ளதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் குழுவினர் கூறினர்.

போராட்டத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்த ஆதரவு, விவசாயிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது. ஆகவே மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விவசாயிகள் மீண்டும் டெல்லியை நோக்கி பேரணியை தொடங்க முயற்சிக்கலாம் என தெரிகிறது. மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் இந்த பிரச்சினை எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.