சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்று ஜி.கே.வாசன் அறிவித்து உள்ளார், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது தாமாகா போட்டியிட்ட நிலையில், தற்போது பின்வாங்கி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த 4ந்தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது  மறைவையடுத்து  காலியாக  உள்ளதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவது என்பது குறித்த இரு கட்சிகள் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இதையடுத்து,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்றும், அதிமுக போட்டியிட உள்ளதாகவும் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும்” அதிமுக விருப்பத்தை ஏற்றுக் கொள்வதாக  கூறிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் அறிவிப்பு தற்போதைய அரசியல் சூழல், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுகவின் கோரிக்கை ஏற்றுக்கொண்டோம் என்றவர்,  கூட்டணி கட்சிகளின் நலனை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.