சென்னை,
தமிழக டிஜிபியின் பதவி காலம் இன்றோடு முடிவடைவதால், புதிய டிஜிபியாக, தற்போது டிஜிபி பொறுப்பு வகித்து வரும் டி.கே.ராஜேந்திரனையே மீண்டும் நியமனம் செய்து மாநிலஅரசு உத்தரவிட்டு உள்ளது.
தற்போது சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக தற்போது கூடுதல் பொறுப்பு வகிக்கும் ராஜேந்திரன், டிஜிபியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சட்டம் ஒழுங்கு கூடுதல் பொறுப்பு டிஜிபியாக பதவி வகித்த டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையுள்ளது. அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் அவர் மேலும் 2 ஆண்டுகள் டிஜிபியாக பதவி வகிப்பார் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தின் உளவுத்துறை டிஜிபியாக உள்ள டி.கே. ராஜேந்திரன் கூடுதல் பொறுப்பாக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. பொறுப்பையும் கவனித்து வருகிறார்.
வெள்ளிக்கிழமையான இன்று இவர் பணி ஓய்வு பெறுவதால், புதிய டிஜிபியை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2006ம் ஆண்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், டி.ஜி.பி. நியமனத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, பதவி மூப்பின் அடிப்படையில் டிஜிபியாக பதவிக்கு தகுதியான 5 பேரை மத்திய பணியாளர் தேர்வாணையத்திடம் மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும். அவர்களில் 3 பேரை மத்திய பணியாளர் தேர்வாணையம் தேர்ந்தெடுக்கும். அந்த மூவரில் ஒருவர் டிஜிபியாக தேர்வு செய்யப்படுவார்.
இந்த நடைமுறைப்படி, மத்திய எல்லை ஆயுதப்படை பிரிவு தலைவராக உள்ள அர்ச்சனா ராமசுந்தரம், சிவில் சப்ளை டிஜிபி கே. ராதாகிருஷ்ணன், தீயணைப்புத்துறை இயக்குநர் ஜார்ஜ், தற்போதைய பொறுப்பு டிஜிபியாக உள்ள டி. கே. ராஜேந்திரன், தமிழ்நாடு மின்வாரிய விஜிலென்ஸ் டிஜிபி மகேந்திரன் ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
நேற்று டில்லியில் நடைபெற்ற மத்திய பணியாளர் தேர்வாணைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தற்போது பொறுப்பு டிஜிபியாக உள்ள டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலத்தை நீட்டிக்க கோரியுள்ளதாக கூறப்பட்டது.
அதைத்தொடர்ந்து, தமிழக அரசு, இன்று காலை தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரனை மீண்டும் நியமனம் செய்து அறிவித்து உள்ளது.. அவரது பதவிக்காலம் 2 ஆண்டுகள்.