சென்னை: சென்னை அருகே வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த  குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமான டிட்வா ,.அதிகாலை 2.30மணிஅளவில் சென்னை அருகே  மாநிலத்திற்குள் ஒரு பகுதி ஊடுருவி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கடலோர மற்றும் உள் மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இதை வெதர்மேன் பிரதீப் ஜான் உறுதிபடுத்தி உள்ளார்.

KTCC-க்கு மீண்டும் ஒரு நாள், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்நாட்டிற்கு நகர்ந்து கொண்டிருக்கிறது (அது முழுமையாக நிலத்திற்குள் நகரவில்லை என்பதை நினைவில் கொள்க). KTCC-க்கு இன்னும் முடிவடையவில்லை, இரவு வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கலாம் என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முதல் இன்று அதிகாலை வரை, கடலோர தமிழகம் மற்றும் சென்னை மாநகரப் பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் இடைவிடாத மிகத் தீவிரமான மழைப் பொழிவு பதிவானது. நீண்ட நாட்களாக மழைக் காக காத்திருந்த தென் சென்னை பகுதிகளிலும் தற்போது பலத்த மழை பெய்துள்ளது.

இந்தகுறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சில மணி நேரங்களில் முழுவதுமாக நிலப்பகுதிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உள்நோக்கி நகர்வதால், கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி, உள் மாவட்டங்களிலும் மழை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

அதாவது அட்லாஸ்ட் டிட்வா புயல் ஓரளவு உள்நாட்டிற்குள் நகர்கிறது, முழுமையாக உள்ளே செல்ல இன்னும் சில மணிநேரங்கள் ஆகும். சென்னையை ஒட்டிய மிகவும் கடுமையான மேகங்கள். முழு கேடிசிசி பகுதியும் நொறுங்கி வருகிறது. கேடிசிசி பகுதியிலிருந்து அதிகாலை 2.30 மணி வரை மீண்டும் ஒரு அற்புதமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

இதன் நகர்வு காரணமாக இன்று அதிக மழை பெறவுள்ள மாவட்டங்கள்: திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள், மாஜி டித்வாவின் முக்கிய தாக்கத்திற்கு உள்ளாகி பலத்த மழையைப் பெறும்.

பரவலாக மழை பெறும் இதர மாவட்டங்கள்:

அதே சமயம், இந்த அமைப்பிற்கு நீர்வழங்கும் மேகக்கூட்டங்கள் தென் தமிழகம் மற்றும் மேற்கு தமிழகப் பகுதிகளிலும் வலுவாகப் பரவியுள்ளன. இதன் காரணமாக, கீழ்க்கண்ட மாவட்டங்களிலும் இன்று நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது:

கோவை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இருக்கும்.

கோயம்புத்தூர், மதுரை திண்டுக்கல் புதுக்கோட்டை, திருவாரூர், நாகை பெல்ட் ஆகிய இடங்களில் நீர்வரத்து பட்டைகள் பெய்து வரும் நிலையில். எக்ஸ் டித்வா புயல் தமிழகத்திற்குள் நகர்வதால் இன்று முழு தமிழக மாவட்டமும் பயனடையும்.

சமூக ஊடகங்களில் வெளியான தகவல் படி, இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் ‘மாஜி’ டித்வாவின் நகர்வு காரணமாக நிச்சயம் பலன் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஒட்டுமொத்த தமிழகமும் இந்த மழை அமைப்பால் நன்மை அடையும் ஒரு நாளாக இன்று இருக்கும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். பொதுமக்கள் மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.