சென்னை: சென்னைக்கு 35 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது டிட்வா புயல் வலவிழந்தது  தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.  இதனால் சென்னை உள்பட அண்டைய மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது. இன்று மாலை   கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

சென்னையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலில் பல மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவெடுத்தது.

இந்த டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மேலும் இந்த டிட்வா புயல் அடுத்து இரண்டு நாட்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (02.12.2025) அதிகாலை 03.15 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதிகள் மற்றும் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா புயல்) கடந்த 6 மணிநேரமாகப் பெரிய அளவில் நகரமால் அதே இடத்தில் நீடித்தது.

இது நேற்று ( 01.122025) இரவு இந்திய நேரப்படி 11.30 மணியளவில், அதே இடத்தில், சென்னைக்கு கிழக்கே சுமார் 50 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கே 140 கி.மீ தொலைவிலும், கடலூருக்கு வட-வடகிழக்கே 160 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு  தெற்கு – தென்கிழக்கே 170 கி.மீ தொலைவிலும், (அட்சரேகை 13.0°N மற்றும் தீர்க்கரேகை 80.6°E க்குஅருகில்) மையம் கொண்டிருந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையத்திற்கும் வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளுக்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் சுமார் 35 கி.மீ ஆகும். இது அடுத்த 12 மணி நேரத்தில் மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து, தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை: வெள்ளத்தில் மிதக்கும் சென்னை – பொதுமக்கள் அவதி – களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்!