சென்னை

ரும் 14 ஆம் தேதி அன்று மாதவன் நடிக்கும் ஜிடி நாயுடு பயோபிக் டைட்டில் வெளியிடப்படுகிறது.

ஏதோ ஒரு துறையில் சாதனை செய்தவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்கள் அவ்வப்போது உருவாகி வருகிறது. அவ்வரிசையில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தை ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ என்ற பெயரில் மாதவன் இயக்கி நடித்திருந்தார். கடந்த 2022ம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது..

இந்த ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ படத்திற்கு பிறகு மீண்டும் விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் மாதவன் நடிக்கவிருப்பதாக போஸ்டருடன் கடந்த 2023ம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. ஜி.டி.நாயுடு, எந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர் ஆவார்.

கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கும் இப்படத்தை ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ படத்தை தயாரித்திருந்த அதே தயாரிப்பு நிறுவனங்கள் ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாற்று படத்தை இணைந்து தயாரிக்கிறது. படப்பிடிப்பு ஜி.டி. நாயுடுவின் பிறந்த இடமான கோயம்புத்தூரில் இப்படத்திற்கான \ இம்மாதம் தொடங்குகிறது.

வரும் பிப்ரவரி 18ம் தேதி படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என்றும் படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அப்டேட் வரும் நாட்களில் தெரிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.