திருவாரூர்
உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் நடந்த வன்முறையைக் கண்டித்து திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் ஒரு கார் நுழைந்து 2 பேர் மரணம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையால் 9 பேர் உயிர் இழந்தனர். மரணம் அடைந்தோர் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சென்ற காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். ஆனால் வன்முறை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் நடந்த போது உத்தரப்பிரதேச மாநிலத்து விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. மரணமடைந்தோருக்காக விவசாயிகள் வருத்தம் தெரிவதது 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
பிறகு விவசாயிகள் வன்முறையில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தனர். இதையொட்டி திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
[youtube-feed feed=1]