ஸ்ரீ ருத்ரகாளியம்மன் திருக்கோவில்,  பவித்திரமாணிக்கம்,   குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம்

தல சிறப்பு :

மிகவும் பழமையான கோயில் (500 ஆண்டுகள்), மன்னர் காலத்தில் பசு தெய்வ சக்தி மிகுந்த அம்மனாக காட்சியளித்ததால், அப்பகுதியினர் வழிபாடு நடத்தி வணங்கினர். நோய் வயப்பட்டு அந்த பசு இறந்ததும் அதை புதைத்து கோயில் கட்டி நாளாடைவில் அம்மனாகவே வணங்கி வருகின்றனர்.

பொது தகவல் :

வடக்குபக்கம் ஐந்து கலசத்துடன் கூடிய முகப்பு, மகாமண்டபத்தில் 500 பேர் அமர்ந்து தரிசனம் செய்யலாம். நுழைவில் வினாயகர் அருள்பாலிக்கிறார். துவார சக்திகள் அருகில் வெற்றி வினாயகர் மற்றும் பாலமுருகன் அருள்பாலிக்கின்றனர். கற்பகிரகத்தில் மூலவரும் அருகில் உற்சவருடன் ஐயனார் அருள்பாலிப்பதுடன் கோயில் பின் பகுதியில் வீரன், பெரியநாயகி மற்றும் உத்தண்டராயர் அருள் பாலிக்கின்றனர். பின் பக்கம் மேலும் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது.

தலபெருமை :

இந்த கோயிலுக்கும் கிழக்கில் தியாகராஜர்கோயிலும், தென் கிழக்கில் திருக்கண்ணமங்கை பெருமாள், தென் மேற்கில் எண்கண் முருகன் கோயில் இருப்பது இக்கோயிலுக்கு பெருமை சேர்க்கிறது. பல்வேறுப்பகுதியில் இருந்து குல தெய்வ வழிபாட்டிற்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

தல வரலாறு :

மிகவும் பழமையான கோவில் (500 ஆண்டுகள்), மன்னர்காலத்தில் பசு தெய்வ சக்தி மிகுந்த அம்மனாக காட்சியளித்துள்ளது. அதனால் அப்பகுயினர் பசுவை அம்மனாகவே கனாதி வழிபாடு நடத்தினர். சிலதினங்களில் அந்த பசு இறந்தது. அதை புதைத்து கீற்று கொட்டகை அமைத்து அந்தஇடத்தில் வழிபாடு நடத்தினர். நாளாடைவில் வளர்ச்சிப் பெற்று தற்போது கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது.

திருவிழா :

வைகாசியில் தீமிதி திருவிழா, பவுர்ணமி விழா மற்றும் மாதந்தோறும் அமாவாசை ஹோமம்.

பிரார்த்தனை :

திருமணத்தடை, புத்திரபாக்கியம், தீராத நோய், பில்லி, சூனியம்,ஏவல், செய்வினை கோளாறு உள்ளிட்ட வகைளுக்கு பிரார்த்த னை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன் :

பிரார்த்தனை நிறைவேறியவர்கள் பால் அபிஷேகம் செய்வதுடன், கால்நடைகள் உயிருடன் (ஆடு, மாடு, கோழி, புறா) தானி யங்கள் காணிக்கை செலுத்தல்,