திருவாரூர்:

டைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி பிரமுகர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் ஒரு கட்சிகள் கோரிக்கைவிடுத்து வருகின்றன. இது தொடர்பாக வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில் திமுக தலைவர் ஸ்டாலினும், இதுகுறித்து டிவிட் செய்துள்ளார்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தலாமா? என்பது குறித்து விளக்கம் அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் ஆணையரிடம் அறிக்கை கேட்டுள்ளது. இந்த நிலையில்,
திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

திருவாரூர் கலெக்டரின் அறிக்கையை தொடர்ந்தோ தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ, அதை இந்தியதேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்தார். அதன்பிறகு தேர்தல் நடைபெறுமா? அல்லது தள்ளி வைக்கப்படுமா என்பது தெரிய வரும்.