திருவண்ணாமலை,

ஞ்சபூதங்களில் பிரசித்தி பெற்றது திருவண்ணாமலை. அக்னி ஸ்தலமான திருவண்ணா மலையில் இன்று கும்பாபிசேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. லட்கக்ணக்கான சிவபக்தர்கள்  கலந்துகொண்டு கோபுர தரிசனம் பெற்றனர்.

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருத்தலமாக போற்றப் படக்கூடியது திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் தான் தற்போது மகா கும்பாபிஷேகமானது வெகு விமர்சையானது நடை பெற்றது.14 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த சீர்மிகு கும்பாபிஷேசக விழாவில்  லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த 31ம் தேதி இந்த கும்பாபிஷேகத்திற்கான யாக குண்டங்கள், பூஜைகள் தொடங்கின. மொத்தம் 128 யாக குண்டங்கள் வளர்க்கப்பட்டு, தொடர்ச்சியாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிறப்பு பூஜைகள் அனைத்துமே நடைபெற்றது.

இதனுடைய இறுதியாக இன்று அதிகாலை 3 மணிக்கு 12ம் கட்ட யாக பூஜையானது தொடங்கியது. இந்த யாக பூஜைகள் முடிவடைந்ததையடுத்து சரியாக 7.30 மணி அளவில் யாக குண்டத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் அனைத்தும் எடுத்து வரப்பட்டு ராஜ கோபுரங்களுக்கு ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து ஆயிரத்து 600 சிறப்பு பேருந்துகள், 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.