திருவள்ளூர்
அரசு ஊழியர்களின் கோட்டை முற்றுகை போராட்டம் காரணமாக திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு ஊழியர் சங்கமான ஜாக்டோ ஜியோ ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகிறது. போராட்டத்தின் ஒரு பகுதியாக கோட்டையை முற்றுகை இடப்போவதாக அறிவிக்கபட்டிருந்தது. இந்த போராட்டத்தை தடுக்க அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது.
ஜாக்டோ ஜியாவின் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக வட்டாட்சியர் இளங்கோவன் உள்ளார். நேற்று நள்ளிரவு காவல்துறையினர் இவரை திடீரென இவருடைய வீட்டுக்குள் புகுந்து கைது செய்துள்ளனர்.