திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு திருப்பூர், நாகை தொகுதிகள் ஒதுக்கீடு: முத்தரசன்

சென்னை:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைமையிலான மெகா கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், தொகுதிகள் ஒதுக்குவது குறித்து இன்று கூட்டணி கட்சியினருடன் திமுக தலைமை பேச்சு வார்த்தை நடத்தியது.

இதில், திமுக கூட்டணியில் இணைந்துள்ள  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்கனவே 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று அவர்களுக்கான தொகுதி என்பது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  திருப்பூர், நாகை தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது  ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பை திமுக தலைமை வெளியிடும் எனவும் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துவிட்டது எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Comunist Mutharasan, CPI, DMK Alliance, india communist, loksabha election, mutharasan, Nagapatnam, tirupur
-=-