சென்னை: பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு இனிமேல் கட்டுபாடு இல்லாமல் அன்லிமிடெட் அதாவது எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றும், சென்னை, பெங்களூர், வேலூர் உள்பட நாடு முழுவதும் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயில்களிலும் பெற்றுக்கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விற்பனை செய்யப்பட்டும் லட்சு பிரசாதத்துக்கு தனி மவுசு உண்டு. இதனால், அதை அதிகம்பேர் விரும்புவதால், ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு லட்சுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனால், அதிக அளவில் லட்சு வேண்டி பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை ஏற்று, இனிமேல், திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா், பக்தா்கள் தங்களிடம் உள்ள தரிசன டிக்கெட்டை காட்டினால், ரூ.50 கட்டணத்தில் அன்லிமிடெட் எண்ணிக்கையில் லட்டு பிரசாதம் வழங்கப்படும். மேலும் தரிசனம் செய்யாமல் வரும் பக்தா்களுக்கு ஆதார் காட்டு அடிப்படையில் தலா 2 லட்டுக்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்த்து.
இதைத்தொடர்ந்து, இனிமேல் திருப்பதி லட்டு பிரசாரம், நாடு முழுவதும் அதாவது சென்னை, பெங்களூரு என திருப்பதி தேவஸ்தானத்தில் கீழ் உள்ள கோவில்களிலும் திருப்பதி லட்டு கிடைக்கும் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
முன்னதாக திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான மார்க்கெட்டிங் குடோனுக்கு பெங்களூருவைச் சேர்ந்த கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கள் கூட்டமைப்பிடமிருந்து நெய் டேங்கர் லாரி நேற்று வந்தது. இதற்கான பூஜை நிகழ்ச்சியில் அதிகாரிகளுடன் தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
பக்தர்களுக்கு மிகவும் சுவையான லட்டு பிரசாதம் வழங்க தரமான பசு நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிபுணர்கள், லட்டுகளின் தரத்தில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். தரமான நெய்யால் லட்டுகளின் தரம் அதிகரிக்கும். கடந்த காலங்களில், நெய் சப்ளையர்கள் தரம், சுவை மற்றும் மணம் இல்லாத பசு நெய்யை சப்ளை செய்தனர். நெய்யின் தரத்தை சரிபார்க்க தேவஸ்தானத்தில் தற்போது புதிய அதிநவீன ஆய்வகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உள்ளூர் கோயில்கள் மற்றும் தகவல் மையங்களிலும் லட்டு பிரசாதத்தை விற்பனை செய்து வருகிறோம். குறிப்பாக உள்ளூர் கோயில்களான திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோயில், திருப்பதி கோதண்டராம சுவாமி கோயில், கோவிந்தராஜ சுவாமி கோயில், ஸ்ரீநிவாமங்கபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், அப்பளயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில், ஒண்டிமிட்டா கோதண்டராம சுவாமி கோயில், ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ், அமராவதி, விஜயவாடா, ராஜமுந்திரி, பிதாபுரம், விசாகப்பட்டினம், ராம்பச்சோடவரம் சென்னை, வேலூர், பெங்களூர் ஆகிய இடங்களில் லட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதில் செப்டம்பர் 2ம் தேதி 50 ஆயிரம், செப்டம்பர் 3ம் தேதி 13 ஆயிரம், 4ம் தேதி(நேற்று) 9,500 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.