திரு;ப்பதி’

வாராந்திர பூஜையில் பங்கேற்காத  திரு;ப்;பதி தேவஸ்தான கல்லூரி பெண் முதல்வர் பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளார்.

ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வரும் வேற்று மதங்களை சேர்ந்தவர்கள் வேறு துறை பணிகளுக்கு மாற்றப்படுவார்கள் என ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தன்படி திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் வேற்று மதங்களை சேர்ந்தவர்கள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு மாநில அரசிடம் சில நாட்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது.

தேவஸ்தான கட்டுப்பாட்டில் இயங்கிவரும் திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வராக அசுந்தா என்பவர் பணிபுரிந்து வந்தார். அசுத்தாவை அந்த பணியில் இருந்து விடுவித்து அதற்கு பதிலாக நரசிங்கபுரத்தில் உள்ள தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம்  இதற்கான ஆணையை திருப்பதி தேவஸ்தானம் வழங்கியது. அரசு உத்தரவின் ;படி முதல் நபராக அசுந்தா மாற்றப்பட்டுள்ளார்.  அசுத்தா வேற்று மதத்தவர் என்பதால், கல்லூரியில் வாராந்திர பூஜைகள் செய்ய யாரையும் அனுமதிப்பதில்லை என்றும், அவ்வாறு பூஜை நடந்தாலும் அதில் பங்கேற்காமல் விலகி வந்ததாகவும், குறிப்பாக பிரசாதங்களை புறக்கணித்து வந்ததாகவும் அவர் மீது பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.