திருப்பதி
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கான தரிசன டிக்கட் முன்பதிவு தொடங்கி உள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த திருப்பதி வெங்கடாசலபதி கோவில் தற்போது கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துக் கொள்ளும் பக்தர்களுக்கு மட்டுமே தற்போது தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பதி கோவிலின் முக்கிய உற்சவமான வைகுண்ட ஏகாதசி திருவிழா இந்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக 10 நாட்கள் நடைபெறும் விழாவுக்காக நாளொன்றுக்கு 20000 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு தொடங்கி உள்ளது. இதற்காக www.tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
Patrikai.com official YouTube Channel