திருப்பதி
திருப்பதியில் நட்ந்து வரும் தெப்போற்சவ திருவிழா நிறைவு பெற்றுள்ளது.
கடந்த 9 ஆம் தேதி ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்ப உற்சவம் தொடங்கியது. இதில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. தின்சரி அதிகாலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
திருப்பதி மலையில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்த தெப்போற்சவம் ஐந்தாம் நாளான இன்று நிறைவடைந்தது. நிறைவு நாளான இன்று தெப்போற்சவம் கண்டருள்வதற்காக உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக கோயிலில் இருந்து புறப்பட்டு ஏழுமலையான் கோயில் திருக்குளத்தை அடைந்தார்.
அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர்கள் எழுந்தருளிய நிலையில்
திருக்குளத்தில் ஏழு சுற்றுக்களாக தெப்போற்சவம் நடைபெற்றது. அப்போது திருக்குளத்தின் நான்கு புறங்களிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். தொடர்ந்து உற்சவர்கள் நான்கு மாட வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனர்.