திருப்பதி கோயிலில் தரிசனம் ஆரம்பம்…
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் இரண்டு மாதங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளது.
வழக்கமான பூஜைகள் தினம்தோறும் நடந்தாலும், பக்தர்கள் தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டதால், பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது, வேங்கடேச பெருமாள் கோயில்.
ஊரடங்கின் போது பிறப்பிக்கப்பட்ட தடைகள் ஒவ்வொன்றாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஏழுமலையான் கோயில் நடையைத் திறக்க ஆந்திர அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் குதூகலித்துள்ள கோயில் நிர்வாகம், வரும் 8 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்யக் கோயிலைத் திறக்க முடிவு செய்துள்ளது.
தொடக்கத்தில் (பரீட்சார்த்த அடிப்படையில்) கோயிலில் பணிபுரியும் 21 ஆயிரம் ஊழியர்கள், முதல் மூன்று நாட்கள் ஏழுமலையானைத் தரிசனம் செய்ய அனுமதிப்பாவார்கள்.
பின்னர், திருமலையில் வசிக்கும் மக்களும், இதனைத் தொடர்ந்து திருப்பதியில் வாழும் பக்தர்களும் சாமி கும்பிடலாம்.
இதனைப் பார்த்து, ‘பாடம்’கற்றுக்கொண்ட பின், பக்தர்களுக்கு அனுமதி.
ஒரு மணி நேரத்துக்கு 300 பேர் முதல் 500 பேர் வரை என்று கணக்கிட்டு, நாள் ஒன்றுக்கு சுமார் 10 ஆயிரம் பக்தர்களை ஆரம்பக் கட்டத்தில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்பது கோயில் நிர்வாகத்தின், திட்டம்.