திருப்பதி

திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் உள்ளிட்ட பல்வேறு சேவைக்கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன

தென் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கோவில் திருப்பதி ஆகும்.   தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.    இந்த பக்தர்களிடம் இருந்து சிறப்பு தரிசனம் உள்ளிட்ட பல வகி கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.   இந்த கட்டணங்கள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதால் அதை உயர்த்த தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதை ஒட்டி நேற்று ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தி கட்டண உயர்வுக்கு தேவஸ்தான உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.   விரைவில் மற்றொரு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி கட்டணங்கள் எந்த அளவுக்கு உயர்த்தப்படும் என முடிவெடுக்க உள்ளது.  வரும் மார்ச் 1 ஆம்தேதி முதல் புதிய கட்டணங்கள் அமுல்படுத்துவது குறித்தும் அந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

[youtube-feed feed=1]