சென்னை
விசிக தலைவர் திருமாவளவன் தமிழ்கத்தில் கனிம சோதனை ஆய்வகம் அமைக்க வலியுறுத்தி உள்ளார்.

இன்று சென்னையில் கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை அங்கீகரிக்க மறுத்த மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உரையாற்றினார்.
திருமாவளவன் தனது உரையில்.
“தமிழகத்தில் கனிம சோதனைக்கான(Carbon Dating) ஆய்வகத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும். இதற்கான செலவு ரூ.40-45 கோடிதான் ஆகும்.
ஆய்வு செய்யப்பட வேண்டிய பகுதிகளில் நாம் அகழாய்வுகளை செய்து அறிக்கை தயார் செய்து கொண்டே இருப்போம். மத்திய அரசின் தொல்லியல்துறை அதை ஏற்கும்போது ஏற்கட்டும்.”
என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel