திருவனந்தபுரம்: கேரளாவில் பருவமழை ஜூன் 1ம் தேதி துவங்கும் என்று எதிர்பார்ப்பதாக இநதிய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையத்தின் இயக்குநர் மிருத்யுன்ஜய் கூறி இருப்பதாவது: நாளை முதல் பருவமழைக்கு சாதகமான அம்சங்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதன் பிறகே கேரளாவில் பருவமழை தொடங்கியதா என்பதை உறுதிப்படுத்த முடியும். கடந்த ஏப்.15ம் தேதி நாங்கள் வெளியிட்ட முதல்கட்ட வானிலை நிலவர அறிக்கையின்படி, நாடு முழுவதும் செப். வரை இயல்பான மழைபொழிவு இருக்கும் என்று கூறி இருந்தோம்.
அதன்பிறகு 2ம் கட்ட வானிலை முன்னறிவிப்பை நாளை வெளியிட உள்ளோம். மேற்கு கடற்கரையோர அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழவு பகுதி புயலாக மாறக்கூடும். இந்த புயல் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை நோக்கிந நகரும்.
ஜூன் 3 மற்றும் 4ம் தேதிகளில் அங்கு மழை பெய்யும். முன்னதாக தென்மேற்கு பருவமழை நாளை முதல் கேரளாவில் பெய்யத் தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.