டில்லி
வருமான வரிக் கணக்கு செலுத்த கடைசி தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் வருமான வரிக் கணக்கு சமர்ப்பிக்க ஜூலை 31 வரை கெடு அளிக்கப்படுவது வழக்கமாகும். இந்த வருடம் கொரோனா பாதிப்பால் அது பலமுறை தள்ளி வைக்கப்பட்டது. நாட்டில் இன்னும் பாதிப்பு குறையாமல் உள்ளது.
இறுதியாக அறிவிக்கப்பட்ட படி வருமான வரிக் கணக்குகள் அளிக்க இந்த மாதம் 31 வரை காலக் கெடு அளிக்கப்பட்டிருந்தது. ஆயினும் பலர் இந்த தேதிக்குள் வருமான வரிக் கணக்கை சமர்ப்பிக்க முடியாது எனத் தெரிவித்து காலக் கெடுவை நீட்டிக்க கோரினர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற மத்திய நிதி அமைச்சகம் காலக் கெடுவை கீழ்க்கண்டவாறு நீட்டித்துள்ளது.
தணிக்கை அறிக்கை தேவைப்படாத வருமான வரிக் கணக்குகள் அளிக்க கடைசி தேதி : 2021 ஆம் வருய்ட்ம ஜனவரி மாதம் 10 ஆம் தேதி ஆகும்.
தணிக்கை அறிக்கை தேவைப்படும் வருமான வரிக் கணக்குகள் அளிக்க கடைசி தேதி : 2021 ஆம் வருய்ட்ம பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி ஆகும்.
[youtube-feed feed=1]